IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர்
செய்திகள்மாநில செய்திகள்தமிழ்நாடு அரசு IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை! By Admin January 19, 2026அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின்போது, கும்பகோணத்தில் விரைவில் நடைபெற உள்ள மஹல்லா ஒருங்கிணைப்பு மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என பேராசிரியர் கே.எம். காதர் முகைதீன் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், மஹல்லாக்களுக்கிடையேயான ஒற்றுமை, சமூக ஒருங்கிணைப்பு, இளைஞர்களின் பங்களிப்பு, கல்வி மற்றும் சமூக முன்னேற்றம் உள்ளிட்ட விடயங்களில் மாநாடு முக்கிய பங்கு வகிக்க வேண்டிய அவசியம் குறித்து விரிவாக பேராசிரியரால் எடுத்துரைக்கப்பட்டது.
மஹல்லா ஒருங்கிணைப்பு மாநாடு சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் அமையும் எனத் தெரிவித்ததுடன், மாநாட்டுக்கான ஏற்பாடுகளை முறையாகவும் விரைவாகவும் மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
மேலும், அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் மாநாட்டை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.இந்த சந்திப்பின்போது, அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
அரசியல் பாபநாசம், வாணியம்பாடி முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் வெற்றிக்கு உழைக்க வேண்டும்: அதிரை நகர நிர்வாகக் கூட்டத்தில் தீர்மானம். அரசியல் “அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்” அரசியல் தேர்தல் ஆணையமே ஆம்னி பேருந்துகளின் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்து – 100சதவீத வாக்கை பதிவு செய்ய கொள்ளையடிக்கும் பேருந்துகளுக்கு கடிவாளமிடு. உள்ளூர் செய்திகள் அதிராம்பட்டினம் ரயில்வே முன்பதிவு மையம் மூடல் – பொதுமக்கள் எதிர்ப்பு. மரண அறிவிப்பு மரண அறிவிப்பு அரசியல் அதிரையிலிருந்து சட்டமன்றத்தை நோக்கி: ஜியாவுதீனின் புதிய அரசியல் பயணம்! Previous articleமரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.Next articleமரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)